விஷால் தானாக ஒதுங்கிக் கொள்வது நல்லது.. பாரதிராஜா எச்சரிக்கை!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா பேசியபோது விஷால் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருப்பதால் அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், அவராகவே விலகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல் அனைவரும் பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. ஆகவே தான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில் முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம். பதவிக்கு வரும் நபர்கள் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு செயலாற்ற வேண்டும். தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப் போகும் ஒருவர் தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.

விஷால் மீது பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன.எனவே நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார். பொது வாழ்வில் குற்றம் இல்லாதவர் தான் தேர்தலில் நிற்க வேண்டும். இவ்வாறு பாரதிராஜா பேசினார்

Advertisements

Next Post

ரியோ குழந்தை பிறந்துருச்சு..! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரியோ... என்ன குழந்தை தெரியுமா?

Sun Mar 8 , 2020
பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி  தொகுப்பாளராக இருந்து,  தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய ரியோ சத்ரியன் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  […]
%d bloggers like this: