3வது சீசன் எல்லாம் ஒண்ணுமேயில்ல..! பிக் பாஸ் மீது ஆரவ் கோபம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் அனுபவித்த மன அழுத்தம் குறித்து நடிகர் ஆரவ் மனம் திறந்து பேசியுள்ளார். சைத்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஆரவ். பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். சரண் இயக்கத்தில் ஆரவ் ஹீரோவாக நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை ராதிகா, வட சென்னை பெண் தாதாவாக நடித்துள்ளார்.

மேலும், காவ்யா தபார், நிகேஷா படேல், யோகி பாபு, ரோஹிணி போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆரவ் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்நிலையில், சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு ஆரவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சினிமா பின்புலம் இல்லாமல் இருப்பதால் என்னால் கதாநாயகன் ஆகமுடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. பலர் முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளார்கள். மற்ற நடிகர்களின் பேனர்களைப் பார்த்து நானும் அந்த இடத்துக்கு வரவேண்டும் என எண்ணுவேன். கனவு நிஜம் ஆகும்போது சந்தோஷமாக உள்ளது. ஒரு நல்ல நடிகராகப் பல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும்.

இந்த வருட பிக் பாஸைக் கொஞ்சமாகப் பார்த்தேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், நாங்கள் முதல் சீஸனில் அனுபவித்ததை விடவும் மன அழுத்தங்களை இந்தமுறை குறைவாகவே அனுபவித்துள்ளார்கள். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களிடம் இதுகுறித்துப் பேசியபோது, போட்டியாளர்களிடம் கடினமாக நடந்துகொள்வதற்குப் பயமாக உள்ளது, ஏனெனில் அவர்கள் தாங்குவார்களா எனத் தெரியவில்லை என்றார்கள்.

ஆனால், எங்களை வைச்சு செஞ்சாங்க. நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். 100 நாள்களைக் கடப்பதும் அதற்குப் பிறகு சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதும் சுலபமாக இல்லை. அங்கிருந்து வெளியே வரும்போது 10, 15 கிலோ எடையை இழந்திருந்தோம். இப்போது நிகழ்ச்சியின் தன்மை மாறிவிட்டது. இருந்தாலும் பிக் பாஸ் ஒரு நல்ல நிகழ்ச்சி”, என ஆரவ் கூறினார்.

Advertisements

fogpriya

Next Post

சங்கத்தமிழன் நாயகிகள் இருவரும்க்கும் இன்னைக்குத்தான் பிறந்தநாள்..!

Sun Dec 1 , 2019
சென்னை: விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்திருந்தனர். சங்கத்தமிழன் நாயகிகள் இருவரும் இன்று ஒரே நாளில் தங்களின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதில், வேடிக்கை என்னவென்றால், நிவேதா பெத்துராஜை விட ராஷி கண்ணா ஒரு வருஷம் பெரியவர் என்பது தான். ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து […]
%d bloggers like this: