டிடி மற்றும் சில முன்னனி சின்னத்திரை பிரபலங்களை பின்னுக்குத்தள்ளிய பிக்பாஸ் லாஸ்லியா..!!

பொதுவாகவே வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் அந்த ஆண்டு முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பட்டியலை ஆண்டு இறுதியில் வெளியிடுவார்கள். இது வழக்கமான ஒன்று. அதே சமயம் தற்போது  வழக்கமான  நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்று வருகின்றனர். அதற்கு காரணம் படங்களுக்கு இணையாக சீரியலில் காதல், சண்டை, வில்லத்தனம், சென்டிமென்ட், ரொமான்ஸ் என தூள் கிளப்பி பயங்கர ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.

அதோடு புதுப்புது வித்தியாசத்தை சின்னத்திரை சீரியல்களில் கொண்டு வருகின்றார்கள். இதனால் மக்கள் மத்தியில் சீரியல்கள் பிரபலமாகி வருகிறது. அதிலும் சமீப காலமாக சிறியவர்கள் முதல் இளைஞர்கள் சமீப அனைவரும் சீரியல்களை பார்க்க தொடங்கி விட்டார்கள். அதேபோல் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கின்றன. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு முடிவில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நட்சத்திரங்கள் யார் என்பதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டது.

சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்று தொலைக்காட்சியில் 2019ஆம் ஆண்டு பிரபலமானவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில் ரசிகர்களின் அன்பை பெற்றவர்களும், தினமும் டிவியில் பார்த்து மகிழும் பெற்றவர்களும், முகங்களும் என்ற பட்டியலில் பல நடிகைகள் இடம் பெற்று உள்ளனர். அப்படி வந்த டாப் 20 லிஸ்டில் இருக்கும் பிரபல சின்னத்திரை நடிகைகள், சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாக்கியலட்சுமி என்கின்ற நட்சத்திரா தான் முதல் இடத்தை என்கின்ற உள்ளார்.

இரண்டாவது இடம்– பிக் பாஸ் லாஸ்லியா.

மூன்றாவது இடம்– நெஞ்சம் மறப்பதில்லை,

ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா.

நான்காவது இடம்– விஜய் தொலைக்காட்சியின் மிகப்பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

ஐந்தாம் இடம்– பிக் பாஸ் போட்டியாளர் சாக்ஷி அகர்வால்.

ஆறாவது இடம்– விஜே கீர்த்தி

ஏழாவது இடம்– பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி.

எட்டாவது இடம்– திருமணம் சீரியல் நாயகி ஸ்ரேயா அஞ்சன்.

ஒன்பதாவது இடம்– பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை சித்ரா.

பத்தாவது இடம்– சத்யா சீரியல் சாயிஷா.

11வது இடம்–பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலம்.

12வது இடம்– யாரடி நீ மோகினி நடிகை சைத்ரா.

13வது இடம்–ராசாத்தி, சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி.

14 வது இடம்–பிரபலமான விஜே பாவனா.

15வது இடம்– விஜே அஞ்சனா.

16 வது இடம்– இரட்டை ரோஜா, பகல் நிலவு சீரியல் நாயகி சிவானி.

17 வது இடம்–செம்பருத்தி புகழ் ஷபானா.

18 ஆவது இடம்– சன் மியூசிக் அக்ஷயா.

19 ஆவது இடம்– திருமணம்சீரியல் ப்ரீத்தி.

20 ஆவது இடம்– சிவா மனசுல சக்தி நாயகி தனுஜா.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் லாஸ்லியா, பல்வேறு முன்னணி சின்னத்திரை பிரபலங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்பது தான். இதனை பார்த்த லாஸ்லியாவின் ரசிகர்கள் அனைவரும் குஷியில் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள். மேலும், இவர்களுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் உள்ளன.

Advertisements

Next Post

கர்ப்பமான பிரியா அட்லீ..!! மிகுந்த மகிழ்ச்சியில் இயக்குனர் அட்லீ..!!

Sat Feb 1 , 2020
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லி. நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். அந்த மூன்றும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்திருக்கின்றன. நடுநிசி நாய்கள், சிங்கம், சிங்கம் 2, போன்ற படங்களில் நடித்த ப்ரியாவுக்கும் அட்லீகும் சிவகார்த்திகேயனின் உதவியால் காதல் பற்றியது. பின் பெற்றோர்கள் சம்மதிதினால் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் பிரியா ஏன் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்பதை பற்றி சமீபத்தில் நடைபெற்ற […]
%d bloggers like this: