பிக் பாஸ் பிரபலம் முகேன் ராவின் வீட்டில் நடந்த சோகம்..!!

அவருடைய இறுதிச் சடங்குகள் மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. பாடகர், நடிகர் என் பன்முகத்தன்மைக் கொண்ட முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது தந்தை இறந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவிற்கு 52 வயதாகிறது. மாரடைப்பு காரணமாக அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. அவருடைய இறுதிச் சடங்குகள் மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இது குறித்து பிக்பாஸ் பிரபலங்கள், திரைத்துறையினர் அனைவரும் தங்களுடைய இன்ஸ்ட்ராகிராம், ட்விட்டர் பக்கங்களில் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் பிக்பாஸ் சீசன் 3யில் முகெனுடன் போட்டியிட்ட அபிராமியும் தன்னுடைய ட்விட்டரில் ”உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் பிரகாஷ் ராவ். தைரியமாக இரு பேபி” என முகென் ராவுக்கு ஆறுதல் தரும்படி பதிவிட்டுள்ளார்.

Advertisements

Next Post

செம கல்யாணம்..! பட்டா கத்தியுடன் கேக் வெட்டிய மணமகன் மாமியார் வீட்டில் கைது..!!

Wed Jan 29 , 2020
சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலயின் திருமண விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது சர்ச்சையானது. இந்நிலையில் மணமகனை போலீசார் மாமியார் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். மணமக்கள் நின்ற மேடையில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டா கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக்கை வெட்ட சொல்லி பட்டா கத்தியுடன் நடனமும் ஆடினர். கடந்த […]

Actress HD Images

%d bloggers like this: