சர்ச்சை புகைப்படம்..! வெளியிட்ட ‘தர்ஷன்’-க்கு ரசிகர்கள் அட்வைஸ்.!

கஞ்சா புகைப்பது போன்ற பிக் பாஸ் தர்ஷனின் புதிய நவீன அகோரி புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் ரியல் ஸ்டார் போட்டியாளர் தர்ஷன். ஆரம்பம் முதலே அவர் தான் டைட்டில் வின்னர் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அவரை வெளியே அனுப்பி, முகெனுக்கு டைட்டிலை கொடுத்தார் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தர்ஷன் சில படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்திருந்தபோதும், இந்த நிகழ்ச்சி அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது.

தர்ஷனை பிக் பாஸ் ஏமாற்றினாலும், மக்களும், கமலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருக்கிறார்கள். தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் கம்பெனி மூலம் தர்ஷனை வைத்து படம் தயாரிக்க உள்ளதாக கமல் ஏற்கனவே அறிவித்துவிட்டார். மேலும் சில தயாரிப்பாளர்களும் தர்ஷனை வைத்து படம் தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் தர்ஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், கழுத்தில் ருத்ராட்ச மாலை, வாயில் கஞ்சா சகிதம் ஒரு சோபாவில் படுத்தப்படி போஸ் கொடுத்திருக்கிறார்.

தர்ஷனின் இந்த மாடர்ன் அஹோரி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகிவிட்டனர். ‘என்ன தர்ஷன் விஜய் தேவரகொண்டா மாதிரி இறங்கிட்டீங்க’ என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என சில ரசிகர்கள் தர்ஷனுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ஷன் வெளியிட்டுள்ள புதிய படம் தொடர்பான அப்டேட் இது. ஆனால் இந்த புகைப்படமே சர்ச்சைக்குரிய வகையில் இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கதைகளை கொஞ்சம் பார்த்து தேர்வு செய்யுங்கள் என அவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

ஏனென்றால் ஏற்கனவே இது போன்று போஸ்டரில் புகை பிடிப்பது போன்ற படங்களில் நடித்தவர்கள் சர்ச்சைகளில் சிக்கியது நாமறிந்த ஒன்று தான். அதோடு அப்புகைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்த போதும், அவை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே தர்ஷனின் படமும் அது மாதிரி ஆகிவிடக் கூடாதே என்ற கவலைதான் ரசிகர்களுக்கு. பிக்பாஸ் முதல் சீசனில் மக்களின் ஆதரவைப் பெற்ற ஓவியா, இப்படித்தான் கதை தேர்வு விசயத்தில் கோட்டை விட்டார். 90 எம் எல் மாதிரியான சர்ச்சை படங்களில் நடித்து தன் பெயரைக் கெடுத்துக் கொண்டார். தர்ஷனும் அது மாதிரி ஆகி விடக் கூடாதென கமெண்ட்டில் ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Advertisements

fogpriya

Next Post

70 வயதான முதியவருக்கு 39 மனைவிகள்,94 குழந்தைகள்,33 பேரக்குழந்தைகள், 100அறைகள் கொண்ட வீடு..!

Sat Dec 14 , 2019
எழுபது வயதான முதியவருக்கு 39 மனைவிகள் இருக்கிறார்கள். தற்போது 40வது மனைவிக்கு அந்த முதியவர் வரன் தேடிக்கொண்டிருக்கிறார். மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சானா என்ற முதியவருக்கு 35 மனைவிகளும், 94 குழந்தைகளும், 14 மறுமகள்களும், 33 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். 150க்கும் மேற்பட்ட இந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இதற்காகவே, 100 அறைகள் கொண்ட பெரிய பங்களா வீட்டை கட்டியிருக்கிறார் ஜியோனாசானா. இந்த பெரியகுடும்பத்திற்கு இன்னும் உறுப்பினர்கள் தேவையென்று […]
%d bloggers like this: