சர்ச்சை நாயகி “மீராமிதுன்” கழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் குங்குமம்.. என புகைப்படம் வைரல்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் மீரா மிதுன். மாடலான இவர் 2016ஆம் ஆண்டிற்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை பெற்றார். ஆனால் திருமணத்தை மறைத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் திருமணம் நடந்ததை மறைத்ததாகவும் கூறி அவர் வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த மீரா மிதுன், டேமேஜான பெயரை மீண்டும் சரி செய்யவும் சினிமா வாய்ப்பு பெறவும் நினைத்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் கார்னர் செய்ததால் அவர் மீது மக்களுக்கு ஆனால் எப்போது இயக்குநர் சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறினாரோ அப்போதே மக்களின் கோபத்திற்கு ஆளானார். இதனை தொடர்ந்து வெளியே வந்த அவர் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஏற்கனவே நடித்திருந்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன. அதன்பிறகு எந்தப் படத்திலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்துக் கொண்டார் மீரா மிதுன். சமூக வலைதளங்களிலும் அவரது பெயர் ரொம்பவே கெட்டுபோய் விமர்சனத்துக்குள்ளானது. இதனால் டேமேஜ்ஜான தனது பெயரை மீட்டெடுக்க திருமணம் செய்து கொள்ள போவதாய் அறிவித்தார். விரைவில் திருமணம் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். இதனால் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து கூறினர்.

இதனிடையே அவர் தனது ஆண் நண்பரிடம் போனில் பல அந்தரங்க விஷயங்களை பேசினார். அந்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் அவர் காதல் உறவில் இருப்பது உறுதியானது. ஆனாலும் அவரது காதலர் யார் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் கழுத்தில் புத்தம் புது தாலியுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். நெற்றியில் பொட்டு, வகுட்டில் குங்குமன் என புதுமணப் பெண்ணை போல் காட்சியளிக்கிறார். மீரா மிதுனின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Advertisements

Next Post

"ஆணவ கொலைகளுக்கு" அரிவாள் தீட்டும்.. அப்பாவுக்கு மகன் சொல்கிற வன்முறைப்பாடம் "கன்னி மாடம்" திரைவிமர்சனம்..!!

Sat Feb 22 , 2020
Advertisements
%d bloggers like this: