‘பிகில்’ பாண்டியம்மா இந்திரஜா ஷங்கர் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்.. குவியும் லைக்ஸ்..!!

‘சர்கார்’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘பிகில்’. விஜய், அப்பா – மகன் என டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். ஸ்போர்ட்ஸ் – ஆக்ஷன் ஜானரைக் கொண்ட இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடியிருந்தார்.

மேலும், கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, அம்ரிதா ஐயர், ரெபா மோனிகா ஜான், வர்ஷா, இந்திரஜா ஷங்கர், ஐ.எம்.விஜயன் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ எனும் நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இதில் ‘பாண்டியம்மா’ என்ற கேரக்டரில் வந்த இந்திரஜா ஷங்கர், பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்திரஜா ஷங்கர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்துக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

Advertisements

Next Post

சிம்ரனின் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. 43 வயசு ஆகுதா?..

Sat Mar 14 , 2020
தமிழ் சினிமாவில் 1990ல் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். நடுவில் சற்று சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது அவர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து உள்ளனர். தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இன்றும் இளமையாகவே தோற்றமளிக்கும் சிம்ரன் டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் […]

You May Like

%d bloggers like this: