நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல பாலிவுட் நடிகை கைது….

நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்தி வந்த நடிகை அம்ரிதா தனோவா மற்றும் மாடல் அழகி ஒருவரை போலீசார் கைது செய்தனர். மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ஓட்டலுக்கு போலி வாடிக்கையாளர்களை அனுப்பினர். அப்போது ஓட்டலில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஓட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த 2 பெண்களை மீட்டனர். மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியாக 32 வயது இந்தி நடிகை அம்ரிதா தனோவா, மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் தின்தோஷி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், கைதான நடிகை அம்ரிதா தனோவா, அன்லிமிடட் நாஷா, பர்வீன் பாபி, தி வேல்ர்டு ஆப் பேஷன் ஆகிய இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் ஆவார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஜூகு பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் விபசார கும்பலை பிடித்தனர். மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக இந்திபட தயாரிப்பு நிறுவன மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் விபசார தொழில் செய்து வந்ததாக நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Next Post

'மூக்குத்தி அம்மன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியது..!

Sun Jan 12 , 2020
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி, மெளலி, ஊர்வசி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு க்ரிஷ் இசையமைத்து வருகிறார். தற்போது இதன் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், “இந்த […]
%d bloggers like this: