தூக்குப் போட்டு பிரபல சீரியல் நடிகை திடீர் தற்கொலை…

சின்னத்திரை நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துவருவது அதிகரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி சின்னத்திரை உலகில் இந்த தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. கடந்த சில மாதத்துக்கு முன் குஷால் பஞ்சாபி என்ற சின்னத்திரை நடிகர் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து இந்தி சின்னத்திரை நடிகர்கள் மீள்வதற்குள் மற்றொரு தற்கொலை சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சேஜல் சர்மா. மாடலான இவர், சினிமாவில் நடிப்பதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு மும்பை வந்தார். அங்கு மீரா ரோட்டில் உள்ள ஷிவா கார்டன் பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் தனது ஃபிரண்ட்டுடன் தங்கி நடித்து வந்தார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சேஜல், தில் தோ ஹேப்பி ஹை ஜி உட்பட சில டிவி தொடர்களில் நடித்தார். இதன் மூலம் பிரபலமானார். வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்துவந்த சேஜல், நேற்று அதிகாலை தனது அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு அறையில் தங்கியிருந்த அவரது ஃபிரண்ட் காலையில் வழக்கம் போல அவர் அறைக் கதவைத் திறந்ததும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது நண்பர்களுக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மீரா ரோடு இன்ஸ்பெக்டர் சந்தீப் கதம் கூறும்போது, கடந்த ஒரு வருடத்துக்கு முன் இங்கு தனது ஃபிரண்டுடன் தங்கி இருக்கிறார் சேஜல். நேற்று அதிகாலை அவர் தற்கொலை செய்திருக்கிறார். அப்போது அவர் ஃபிரண்ட் மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். இதுபற்றி மேலும் விசாரித்து வருகிறோம் என்றார். தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சொந்த வாழ்க்கையில் அவருக்கு பிரச்னை இருந்ததாகவும் அதன் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தில் தோ ஹேப்பி ஹை ஜி தொடரில் அவருடன் நடித்த, அரு கே வர்மா கூறும்போது, கடந்த 10 நாட்களுக்கு முன் கூட அவரிடம் பேசினேன். அப்போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவரது தற்கொலை அதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இந்தி சின்னத்திரை நடிகர், நடிகைகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

நடிகை நயன்தாரா-வுக்கு அந்த பெயரை வச்சது யாரு?.. இதற்கெல்லாம் சண்டை போடும் இயக்குனர்கள்..!!

Sun Jan 26 , 2020
நடிகை நயன்தாராவுக்கு அந்தப் பெயரை வைத்தது யார் என்று இயக்குனர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. மனசினக்கரே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவரது ஒரிஜினல் பெயர், டயானா மரியம் குரியன். இதையடுத்து ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சந்திரமுகி, கஜினி என்று அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடிக்க, […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: