கோலாகலமாக நடந்து முடிந்த”சாம்பியன்” இசை வெளியீடு..!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “சாம்பியன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு பெறும். நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்து, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்க்கையில் கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன்.

விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.கே.சுரேஸ், களஞ்சியம் என்னோட அப்பா, அவரின் நினைவாகத்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கோம். அவரோட பேரனை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தினதுக்கு சுசீந்தரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார். சுசீந்திரன் ஸ்போர்ட் படங்களை எடுப்பதில் வல்லவர் அவருக்கு மேலும் நல்லப்பெயரை தேடித்தரும் படமாக சாம்பியன் அமையும் என்றார். மேலும் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அப்புகுட்டி “சாம்பியன்” படம் பார்த்தேன் விஷ்வா ஒரு அறிமுக நடிகர் போலவே இல்ல, நல்லா நடிச்சிருக்கார். எங்க டைரக்டரால யார் வேணா எப்படி வேணும்னாலும் உருவாக்க முடியும்னு தெரிஞ்சது. ஹீரோயின் பார்த்தவுடனே லவ் பண்ற மாதிரி அழகா இருக்காங்க. படம் சூப்பரா வந்திருக்கு. படம் ஜெயிக்க வாழ்த்துக்கள் என்றார்.

Advertisements

fogpriya

Next Post

பாவடை தாவணியில் ஸ்ருதி ரெட்டி.. !

Fri Dec 6 , 2019
Advertisements

Actress HD Images

%d bloggers like this: