“சாம்பியன்” – திரை விமர்சனம்..!

கணவனின் உயிரைப் பறித்த கால்பந்து மைதானத்துக்குள், மறந்தும் தன் மகன் கால் வைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறாள் அம்மா. ஆனால், சிறந்த கால்பந்து வீரனாக தன்னைப் பார்க்க ஆசைப் பட்ட அப்பாவின் கனவை நனவாக்க, அம்மா வுக்கு தெரியாமல் போட்டிகளில் பங்கேற் கிறான் மகன். ஆடுகளம் அந்த மகனுக்கு ஓர் உண்மையை திரைவிலக்கிக் காட்டுகிறது. அவனது அப்பாவின் இறப்பின் பின்னால் இருக்கும் மர்மம் விலகியபோது, பழிவாங் கப் புறப்படுகிறான் அந்த மகன். அவனது பழிவாங்கல் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை விரித்துச் சொல்கிறது கதை.

விளையாட்டை மையப்படுத்திய படங் கள் அதிகரித்திருக்கும் தமிழ் சினிமாவில், மாறுபட்ட பழிவாங்கல் விளையாட்டுப் படமாகத் தர நினைத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். ஆனால், அவரது முயற்சி பார்வையாளர்களை பெரும் அயர்ச்சியில் தள்ளிவிடுகிறது.

வடசென்னையின் பின்தங்கிய பகுதி களில் வசிக்கும் எளிய, சாமானியக் குடும் பங்களின் இயல்பான வாழ்க்கை, அதில் கால்பந்துக்கான இடம், இதுபோன்ற குடும் பங்களில் பிறந்து வளரும் பிள்ளைகள் வாய்ப்பு அமைந்தால் திறமையானவர்களாக உருவாகி வருவார்கள் என்பன உள்ளிட்ட திரைக்கதைக்கான கதைக் களப் பின் னணியை பெரிதும் திரித்துக் கூறாமல் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், கதையின் முக்கிய காட்சிகள் எதுவும் புதிதாகவோ, ஈர்க்கும் விதமாகவோ இல்லை. அத்துடன், எளிதில் ஊகித்துவிடும் விதமாக காட்சிகளை அமைத்திருப்பதும், நாயகனுக்கான காதல் பகுதியை வலிந்து திணித்திருப்பதும் இதை சராசரிப் படமாக்கி விடுகிறது.

விளையாட்டில் முன்னேறத் துடிக்கும் நாயகனுக்கு காதலியும், நண்பர்களும், பயிற்சியாளரும் உதவுவதை, கைதூக்கி விடுவதை பல படங்களில் பார்த்து அலுத்துவிட்டார்கள்.

கால்பந்து விளையாட்டுக் காட்சிகள், நாயகன் பயிற்சி பெறும் காட்சிகள் ஆகி யவை படத்தில் குறைந்த அளவே இருந்தா லும், சுவாரஸ்யமாகவும் இயல்பாகவும் வடிவமைத்துப் படமாக்கி இருப்பது, படத்தின் ஈர்ப்பான அம்சம் எனலாம்.

அம்மாவின் பாசத்தில் குழைந்து, பயிற்சி யாளரின் அறிவுரைக்கு செவிகொடுத்து, காதலில் உருகி, ஆடுகளத்தில் அதிரடி காட்டி, அப்பாவின் சாவுக்கு வெகுண்டு பழி வாங்கப் புறப்படும் ஜோன்ஸ் கதாபாத் திரத்தில் பல வண்ணங்களை மிக இயல்பாக வேறுபடுத்திக் காட்டி நடித்திருக்கும் அறிமுக நாயகன் விஷ்வாவுக்கு நல்வரவு கூறலாம். அடிப்படையில் அவர் ஒரு விளையாட்டு வீரர் என்பதாலோ, என்னவோ கால்பந்து விளையாட்டுக் காட்சிகளில் துடிப்பையும், இயல்பையும் நடிப்பில் வழியவிடுகிறார்.

ஜோன்ஸின் பயிற்சியாளர் சாந்தாவாக வரும் நரேன், தனது அனுபவமும், கச்சிதமும் கூடிய நடிப்பால் கைதட்டல் அள்ளுகிறார். உயிர் நண்பனின் மகனுடைய எதிர்காலம் பாழாகிவிடக் கூடாது என்பதற்காக தன் னையே ஒப்புக் கொடுக்கும் காட்சிகளில் நரேன் ஒருபடி அதிகமாகவே கவனிக்க வைக்கிறார். தனசேகர் கதாபாத்திரத்தில் வில்லனாக ஸ்டன்ட் சிவாவின் நடிப்பும் ஈர்க்கிறது. கதாநாயகிகளாக நடித்துள்ள மிருணாளினி, சவுமிகா இருவரும் படத்தில் தலைகாட்டி உள்ளனர்.

கதைக் களம், கதையோட்டம் ஆகியவற் றுடன் கைகோத்து செல்கிறது சுஜித் சாரங் கின் ஒளிப்பதிவு. அரோல் கரோலியின் இசை யில் எந்த பாடலும் மனதில் பதியவில்லை. ஒருசில இடங்களில் ரசிக்கவைத்த பின்னணி இசை, பல காட்சிகளில் சத்தம் அதிகமாக இருக்கிறதோ என்ற உணர்வை உண்டாக்கு கிறது. விளையாட்டையும் பழிவாங்கல் கதை யையும் இணைக்க முயற்சித்தது தவறு அல்ல. அதற்கு, சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்புகளால் வலு சேர்த்திருந்தால் ‘கோல்’ அடித்திருப் பான் இந்த சாம்பியன்!

Advertisements

fogpriya

Next Post

தனுஷுடன் அமலா பால் அடித்த கூத்து - வைரல் புகைப்படம்..!

Wed Dec 18 , 2019
நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் சூப்பர் ஹிட் கலெக்ஷனில் கல்லா கட்டிய படங்களுள் முக்கியமான படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் முதல் பாகத்தை வேல்ராஜ் ராஜ் இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து வெளிவந்த இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.   இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். மேலும் இவறலுடன் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்ளின் ஏகோபித்த […]

You May Like

%d bloggers like this: