“குயின்” இணையதள தொடரை தடை விதிக்க கோரிய வழக்கு.. சென்னை ஹைகோர்ட்! தள்ளுபடி செய்தது..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட குயின் இணையதள தொடரை தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இயக்குநர் கெளதம் மேனனுன், ‘கிடாரி’ இயக்குநர் பிரஷாந்த் முருகேசனும் ‘குயின்’ என்ற பெயரில் ஜெயலலிதா -வின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக இயக்கியுள்ளனர்.

குயின் வெப் சிரீஸில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ‘சக்தி சேஷாத்ரியாக’ ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளர். ஜெயலலிதாவின் பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்கும் இந்த வெப் சிரீஸில் சிறு வயதில், அனிகா சுரேந்திரனும், இளவயதில் அஞ்சனா ஜெயபிரகாஷும் நடித்துள்ளனர். இந்த குயின் வெப் சீரிஸ் கடந்த 14ஆம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு இருந்தபோது வெளியான குயின் இணைய தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். உள்ளாட்சி தேர்தல் முடியும்வரை குயினுக்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைதிருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisements

Next Post

விஜய்யின் அடுத்த படம் தளபதி 65 எந்த நிறுவனத்திற்கு தெரியுமா? வைரலாகும் தகவல்..!

Sat Jan 4 , 2020
விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியவைகளை விஜய் தேர்வு செய்து விட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது அந்த வகையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி ’தளபதி 65’ படத்தை […]
%d bloggers like this: