நித்தியானந்தா கையால் பிரசாதம்..! தீயாய் பரவும் போட்டோஸ்..! கடுப்பான பாடகி..!

நித்தியானந்தா கையால் பிரசாதம் வாங்கியது தொடர்பாக பரவும் போட்டோ குறித்து பிரபல பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே.. பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்த பாடலுக்காக முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார் சின்மயி. அதனை தொடர்ந்து ஏராளமான பாடல்களை பாடி வருகிறார் சின்மயி. அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார்.

சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தனக்கும் தனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். தொடர்ந்து மீடூ இயக்கத்தின் மூலமும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேசி வருகிறார்.

அதோடு பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார் சின்மயி. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, சின்மயி மற்றும் அவரது தாயார் சாமியார் நித்தியானந்தாவிடம் ஆசி பெறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சாமியார் நித்தியானந்தா மீது அண்மைக் காலமாக குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சூரியன் உதிப்பதை நிறுத்தி வைத்தேன், மேட்டூர் அணையின் நீருக்குள் உள்ள பழமையான சிவன் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் தான் உள்ளது. அந்த கோவிலை போன ஜென்மத்தில் தான்தான் கட்டியதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

மேலும் குழந்தைகள் கடத்தல் வழக்கில் அகமதாபாத் போலீசார் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர். ஏற்கனவே நடிகையுடன் இருந்த வீடியோ வெளியான நிலையில் தற்போது தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா.

தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சின்மயி நித்தியானந்தாவை சந்தித்த போட்டோ வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சின்மயி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியாரை சந்திப்பதா என விமர்சனங்கள் எழுந்தன. நித்தியானந்தாவிடம் சின்மயி தனது தாயாருடன் பிரசாதம் வாங்குவதாக இருந்தது அந்த போட்டோக்கள்.

இந்நிலையில் இந்த போட்டோக்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாடகி சின்மயி. இதுதொடர்பான அவரது டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் போலியானது என்று நான் கூறிய பிறகும் இந்த ரசிகர்கள் ஏன் மீண்டும் இதை செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

Advertisements

fogpriya

Next Post

ஆபாச நடிகையுடன் என்னை ஒப்பிடுவதா? யாஷிகா ஆவேசம்..!

Tue Nov 26 , 2019
’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்று அதன் பின்னர் பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் நடிகை யாஷிகா. இவர் தற்போது ஒரு சில படங்களில் நாயகியாகவும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வரும் நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை, […]
%d bloggers like this: