‘ஒய்.ஜி. மகேந்திரனை’ அசிங்கப்படுத்திய பாடகி “சின்மயி”..!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் சைட் அடிக்கவும் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாடகி சின்மயி, ‘இந்த மனிதர்களின் கருத்துக்களை நாம் அனைவரும் பொதுவாகப் புறக்கணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவர்களை மாற்ற முடியாது, நம் நேரம் தான் விரயம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

நடிகை வேதிகா-வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்..!

Tue Dec 24 , 2019
Advertisements
%d bloggers like this: