சியான் விக்ரம் 58வது படத்தின் டைட்டில் லீக்..?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் ‘அமர்’ என்ற தகவல் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முறையாக ‘விக்ரம் 58’ படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

‘விக்ரம் 58′ படத்தில் நடிகர் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடித்து வருவதாக அண்மையில் ஒரு தகவல் உலா வருகிறது. தசாவதாரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் 10 கெட்டப்புகளில் நடித்திருந்த நிலையில், சியான் விக்ரமை 20 கெட்டப்புகளில் பார்க்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எனை நோக்கிப் பாயும் தோட்டா வெளியாகியுள்ள நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படம் எப்போது திரைக்கு வரும் என்றும், ஜானுக்காக வெயிட்டிங் எனவும் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘விக்ரம் 58′ படத்தை முடித்த கையோடு நடிகர் விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கவுள்ளார். கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திற்கு இன்னும் 60 நாள் ஷூட்டிங் தேவை படும் நிலையில், எந்த படத்துக்கு விக்ரம் முன்னுரிமை கொடுக்கவுள்ளார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisements

fogpriya

Next Post

3வது சீசன் எல்லாம் ஒண்ணுமேயில்ல..! பிக் பாஸ் மீது ஆரவ் கோபம்..!

Sun Dec 1 , 2019
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் அனுபவித்த மன அழுத்தம் குறித்து நடிகர் ஆரவ் மனம் திறந்து பேசியுள்ளார். சைத்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஆரவ். பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். சரண் இயக்கத்தில் ஆரவ் ஹீரோவாக நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை ராதிகா, வட […]
%d bloggers like this: