ஸ்ரீ கைலாசா-வில் நடிகையுடன் செட்டிலாக விரும்பும் பிக்பாஸ் பிரபலம்…!

பாலியல் வன்கொடுமை வழக்கு, குஜராத் ஆசிரம வழக்கு என அடுத்தடுத்த நெருக்கடிகளுக்கு உள்ளான நித்யானந்தா, ஈக்வேடார் நாட்டில் கைலாசா என்ற சொந்தத் தீவை விலைக்கு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் நித்யானந்தா விவரித்த கைலாசா என்ற நாடு குறித்தும், நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை குறித்தும் இணையதளத்தில் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து விளக்கமளித்த ஈக்வேடார் அரசு நித்யானந்தா தங்கள் நாட்டில் இல்லை என்றும், கைலாசா என்ற தீவு ஈக்வேடார் நாட்டில் இல்லை என்றும் விளக்கமளித்தது.

ஆனால் கைலாசாவை கையிலெடுத்த மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கி காமெடி மீம்ஸ்களை வெளியிட்டு மகிழ்ந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஹரீஷ் கல்யாணிடம் எந்த நடிகையுடன் கைலாசா தீவில் செட்டில் ஆக ஆசை என்ற கேள்வியைத் தொகுப்பாளர்கள் நகைச்சுவையாக கேட்க, ராஷ்மிகா மந்தனாவுடன் செட்டில் ஆவேன் என்று பதிலளித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டதற்கு பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படம் அவருக்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அதைத்தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அவர் தற்போது தாராள பிரபு படத்தில் நடித்து வருகிறார்.

Advertisements

Next Post

மீண்டும் விக்ரம்-வேதா பட நடிகை உடன் இணையும் மாதவன்....

Tue Jan 14 , 2020
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன், மீண்டும் நேர் கொண்ட பார்வை பட நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது.  இந்நிலையில், இந்த படம் தமிழில் மாறா […]

You May Like

%d bloggers like this: