பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் இரண்டு புதிய படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான லாஸ்லியா தற்போது நடிகையாக அவதாரமெடுத்துள்ளார். விஜய் டிவியில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இந்நிகழ்ச்சி அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியாவின் காதல் ரசிகர்களிடையே பேசுபொருளானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியாவுக்கு திரைத்துறையில் நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறினார். இதையடுத்து லாஸ்லியா எப்போது சினிமாவில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆரி நாயகனாக நடிக்க, ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் லாஸ்லியா திரைத்துறையில் அறிமுகமாகிறார். மேலும் நகைச்சுவை நடிகர் செந்திலும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சந்திரா மீடியா விஷன் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிரண்ட்ஷிப்” குறித்து ஹர்பஜன் சிங் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “நேற்று கீச்சு, சினிமா கதாபாத்திரம், இணையத் தொடர். இன்று ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் நாயகன், தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப் பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர், தல, தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம்” என்று படத்தின் போஸ்டருடன் தெரிவித்திருந்தார் .இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் கதாநாயகியாக நடிக்கும் முதல்படம் இதுவாகும். இப்படத்தின் மூலம் ஹர்பஜனும், லாஸ்லியா இருவரும் ஜோடியாக இணைந்து படம் நடிக்கவிருப்பது சமூகவலைத்தளங்களில் செம்ம வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisements

Next Post

அழகான கவர்ச்சியில் ஆளை மயக்கும்...காந்த கண்ணழகி..!! "அனு இம்மானுவேல்" புகைப்படங்கள் வைரல்..!!

Tue Feb 4 , 2020
மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இமானுவேல். இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார். […]
%d bloggers like this: