யோகி பாபு ஹனிமூன் செல்ல போகும் இடம் கைலாசா…காக்டெய்ல் படத்தின் கலகலப்பான டீசர் ரிலீஸ் …!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல லாபத்தை கொடுத்ததால் அவரை வைத்து ஹீரோவாக படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கும் காக்டெயில் திரைப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.

விஜய் முருகன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு சாய் பாஸ்கர் இசையமைக்கிறார். நவீன் ஒளிப்பதிவில் பாசில் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றில் முருகன் கெட்டப்பில் பூ நூல் இல்லாமல் இருந்த யோகி பாபு பெரும் சர்ச்சைக்குள்ளானார்.
இதனால் இப்படத்தின் மீதான மக்களின் கவனம் எளிதாக திரும்பியதை அடுத்து சற்றுமுன் காக்டெயில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். கலகலப்பான காமெடியில் கவுண்டர் கொடுக்கும் யோகி பாபுவுக்கு நிச்சயம் இப்படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisements

Next Post

ரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா? செல்லாதா? என்ன சொல்கிறார்கள் "ரிசர்வ் வங்கி" அதிகாரிகள்...

Sat Feb 22 , 2020
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா செல்லாதா என்ற சந்தேகம் மீண்டும் தொற்றிக் கொண்டிருக்க, இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இதற்கு பதிலளித்துள்ளனர். இதுகுறித்த வதந்திகளை நம்ப வேண்டாமென்று கேட்டுக்  கொண்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய், 500 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதில், 2 ஆயிரம் ரூபாய் வந்தாலும் வந்தது; அது பற்றிய பல்வேறு தகவல்கள் […]
%d bloggers like this: