“குஷ்பு” சொன்ன ரகசியம்.. செப்டம்பர் வந்தா எனக்கு இத்தனை வயசுன்னா நம்புவீங்களா..!! வியந்த ரசிகர்கள் !!

நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிகழ்வும் உண்டு.

அவரின் ஸ்டைலை ஃபாபோவ் பண்ண பெண்களும் உண்டு. வயதாகிவிட்டாலும் தற்போது சின்னத்திரை சீரியலான லக்‌ஷ்மி ஸ்டோரில் நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர்.சி ஐ திருமணம் முடித்து தன் இருமகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அதே வேளையில் அரசியலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 1980ல் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பயணத்தினை ஆரம்பித்த இவர், 1990ம் ஆண்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்தது மட்டுமின்றி தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.

பின்பு சினிமா இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி யைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.தற்போது சமீபத்தில் தனது 20வது திருமண நாளை கொண்டாடிய குஷ்பூ தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் என் கணவர் எனக்கு ப்ரொபோஸ் செய்து 25 வருடங்கள் ஆகிறது.மேலும் எங்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது.என் கணவர் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்.எனக்கு செப்டம்பர் மாதம் வந்தால் 50 வயதாகிறது என பதிவிட்டுள்ளார்.ரசிகர்கள் குஷ்பூவிற்கு 50 வயதாகிவிட்டதா என வாயைப்பிளந்துள்ளனர்.

Advertisements

Next Post

அஜித்துடன் நடிக்க முடியாதது மிகுந்த கவலைதான்..!! பிரசன்னா உருக்கம்..!!

Wed Jan 22 , 2020
நடிகர் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது மிகுந்த கவலையளிப்பதாக நடிகர் பிரசன்னா அறிக்கை வெளியிட்டுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தின் 60-வது படமாக ‘வலிமை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்க எச்.வினோத் இயக்குகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: