பிரபலங்கள் வாழ்த்து மழையில் நடந்த நடிகர் “சதிஷ்” திருமணம்..!

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வரும் நடிகர் சதிஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.வைபவ் நடிப்பில் வெளியான சிக்சர் படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கை சிந்துவைத் தான் சதிஷ் திருமணம் செய்துள்ளார்.நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சதிஷின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் மற்றும் முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் என பலரும் கலந்து கொண்டு சதிஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர்.

சதிஷ் – சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் SathishWedsSindhu என்ற ஹாஷ்டேகும் டிரெண்டாகி வருகிறது.காதல் திருமணமா?

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கையை சதிஷ் திருமணம் செய்துள்ளதால், இந்த திருமணம் காதல் திருமணமா என்ற சந்தேகம் கிளம்பியது. ஏனென்றால், சிக்ஸர் படத்தில் வைபவ்வின் நண்பனாக சதிஷும் நடித்திருந்தார். ஆனால், இது முழுக்க முழுக்க பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என இயக்குநர் சாச்சி தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் அறிமுக படமான மெரினா படத்தில் இருந்தே அவருடன் சதிஷ் நடித்து வருகிறார். தன்னுடைய நெருங்கிய நண்பரான சதிஷுக்கு தன்னுடைய பல படங்களில் வாய்ப்பளித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சதிஷின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

காமெடி நடிகர் சதிஷின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி ஜீவா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


காமெடி நடிகர் சதிஷ் – சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தின

Advertisements

fogpriya

Next Post

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனைக் கொலை செய்த கும்பல் - திருச்சியில் நடந்த கொடூரம்.. !

Wed Dec 11 , 2019
திருச்சிக்கு அருகேயுள்ள அரியமங்கலத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்துல் வாகித். இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி முதல் இவரைக் காணவில்லை. இந்நிலையில் அதுபற்றி அவரது பெற்றோர் புகாரளிக்க போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காணாமல் போன சிறுவன் பிரபல சேகர் என்பவரின் மகன் இளவரசன் மற்றும் அவரது […]
%d bloggers like this: