ரொமான்டிக் ரவுடியாக “யோகி பாபு”- படம் 50/50

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு அவ்வப்போது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் ஹீரோவாக நடித்த தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதுயோகி பாபு நடித்து வரும் படங்களில் ஒன்றான 50/50 என்ற திரைப்படத்தில் தான் அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் அவர் ரொமான்டிக் ரவுடியாக நடித்து இருப்பதாகவும் அந்த படத்தின் இயக்குனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.


இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருப்பதாகவும் அதில் யோகிபாபுவுக்கு மூன்று பாடல்கள் இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்யோகிபாபு உடன் நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், நந்தா சரவணன் , மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Advertisements

fogpriya

Next Post

'இமெயில்' மூலம் அம்பலமாகும் உண்மை.. மாயமான நித்தியின் பெண் சீடர்கள் எங்கே?

Thu Dec 12 , 2019
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மாயமான சகோதரிகள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பேச விருப்பம் தெரிவித்துள்ளனர்.நித்யானந்தாவிற்குச் சொந்தமாக, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மடத்தில் பணிக்கு இருந்த சகோதரிகள் 2 பேரை காணவில்லை என புகார் எழுந்தது. இதன்பேரில், அவர்களின் தந்தை குஜராத் நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நித்யானந்தா ஆசிரமத்தில் தேடுதல் நடத்திய போலீசார், அவரது ஆசிரம நிர்வாகிகள் சிலரையும் கைது செய்தனர். அத்துடன், நித்யானந்தாவையும் கைது […]

Actress HD Images

%d bloggers like this: