“புஷ்பவனம் குப்புசாமி” மகள் காணாமல் போனதாக சர்ச்சை..!

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி காணாமல் போயிருப்பது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, பல்லவியைத் தேடி வருகின்றனர்.பிரபல நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருத்துவம் படித்துள்ள மூத்த மகள் பல்லவி (24). கடந்த ஞாயிறன்று , தனது காரில் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பின், பல்லவி வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இதையடுத்து குப்புசாமியின் உறவினர் பல்லவி காணாமல் போனதாக அபிராமபுரம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல்லவி பேஸ்புக்கில் நான் காணாமல் போகவில்லை, யாரும் என்னை கடத்தவில்லை, நலமாக உள்ளேன், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

அடுத்த படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் தருவேன்.. இயக்குனர் பா இரஞ்சித்

Tue Dec 17 , 2019
நான் எடுக்கும் அடுத்த படத்தில், காதுகேளாத, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் தரும் சிறப்பு தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன் என்று இயக்குனர் பா இரஞ்சித் கூறியுள்ளார். நேவிகேட்டர், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சிறந்த உலக தங்குமிடம் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து, அவருடைய தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி […]
%d bloggers like this: