“கொரோனா வைரஸை” அழிப்பதற்காக மருந்து கண்டு பிடித்தால் ஒரு கோடி பரிசு! பிரபல நடிகர் உருக்கமுடன் அறிவிப்பு..!!

உலக அளவில் உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து தற்போது வரை கண்டு பிடிக்கவில்லை. இந்த வைரஸ் சைனாவில் உள்ள யுகான் நகரத்தில் இருந்து பரவி தற்போது 25 நாடுகளுக்கும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது, இதுவரை 900 பேர் இருந்திருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.  37 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பலில் வைரஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்காக சீனாவில் ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் அளவிற்கு மருத்துவமனையை ஒரே வாரத்தில் கட்டி முடித்துள்ளனர். இந்த நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சீன அரசு தீவிரமாக செய்து வருகிறது. ஆனாலும்கூட யாராவது ஒருவர் வைரசால் தாக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அவர்களை குற்றவாளியை போல் காவல்துறையினர் இழுத்துச்செல்லும் வீடியோக்களை பார்க்கும்போது நெஞ்சை பதை பதைக்கிறது.

பிரபல நடிகரான ஜாக்கிஜான் இந்த வைரஸுக்கு தனியாகவோ அல்லது ஒரு அமைப்பாகவோ மருந்தினை கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பின்படி ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை வெறும் பணமாக பார்க்காமல் மக்களின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக அறிவியல் சார்ந்த விஞ்ஞானத்தை முழுமையாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

சென்னையை மிஞ்சிய சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் மைதானம் சேலத்தில்.. விரைவில் தோனி கலந்து கொள்ளும் ஐபிஎல் போட்டி..!!

Tue Feb 11 , 2020
சேலத்தை அமெரிக்காவாக மாற்றுவேன் என சொன்னாலும் சொன்னார் அதை செய்து காட்டாமல் விட மாட்டார் போல நம்ம முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். சமீபத்தில்தான் சேலத்தில் பறக்கும் பேருந்து நிலையம் திட்டத்தை தொடங்கி அமோகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சேலம் அருகே கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கி சேலத்தை கௌரவப்படுத்தி உள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை போல […]
%d bloggers like this: