“டகால்டி” டீஸர் அப்டேட் கொடுத்த சந்தானம்..!

விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் டகால்டி படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகிறது. டகால்டி டீஸர் 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனது ரசிகர்களை அவ்வளவு நேரம் காக்க வைக்க விரும்பவில்லை, அதற்கு முன்பே டீஸர் வெளியாகும் என்ற அறிவிப்பை சந்தானம் வெளியிட்டுள்ளார். காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் தற்போது, ஹீரோவாக ஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் காமெடியிலும் கலக்கி வருகிறார்.

ஷங்கரின் உதவி இயக்குநரான விஜய் ஆனந்த் தான் சந்தானத்தின் டகால்டி படத்தை இயக்கியுள்ளார். ஷங்கரின் எந்திரன் படத்தில் நடித்த சந்தானம், தற்போது ஷங்கரின் சிஷ்யன் படத்தில் ஹீரோவாக கலக்கவுள்ளார். சந்தானம் தயாரித்து நடித்து வரும் டகால்டி படத்தில், சந்தானத்துக்கு ஜோடியாக மேற்கு வங்க நாயகி ரித்திகா சென் நடித்துள்ளார். காமெடியில் கலக்க யோகி பாபுவும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

டகால்டி டீஸர் 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனது ரசிகர்களை அவ்வளவு நேரம் காக்க வைக்க விரும்பவில்லை, மாலை 4.15 மணிக்கே ரிலீஸ் என்ற அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம்.

சந்தானம் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனாலும், தில்லுக்கு துட்டு படம் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், டகால்டி மற்றும் டிக்கிலோனா என பெரிய பட்ஜெட் படங்களில் சந்தானம் நடித்து வருகிறார். டிக்கிலோனா படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம். நிச்சயம் சந்தானத்தின் அடுத்த இரு படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

பா.ஜ.க.,வில் இணைந்த ராதாரவி..! சின்மயி காட்டம்..! செவி சாய்ப்பாரா ஸ்மிரிதி இரானி?..

Mon Dec 2 , 2019
நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ராதாரவி, தற்போது பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார். ராதாரவி பா.ஜ.க.,வில் இணைந்த நிலையில், மேடைகளில் பெண்களை அவமதிக்கும் விதமாகவும் ஆபாசமகாவும் ராதாரவி பேசி வருகிறார் என்றும், அவர் குறித்த குற்றச்சாட்டுக்களை அடுக்கி ஸ்மிரிதி இரானியிடம் இவரை ஏன் பா.ஜ.க.,வில் சேர்த்துள்ளீர்கள் என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார். மீடு விவகாரத்தில் இருந்தே ராதாரவியை விமர்சித்து வரும் சின்மயி, தற்போது ராதாரவி […]
%d bloggers like this: