சசிக்கலாவை சீண்டிய தர்பார்…. அனல் பறக்கும் வசனங்கள்…

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள தர்பார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிக்கலாவை குறிப்பிடும் வசனம் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இன்று உலகமெங்கும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் தனது ரமணா முதல் தற்போதைய தர்பார் வரை பெரிய ஸ்டார் ஹீரோக்களை வைத்து சமூக நீதி, அரசியல் பேசுவதில் ஜித்தர்.

விஜய் நடிப்பில் இவர் இயக்கிய கத்தி, சர்க்கார் படங்களில் கூட அரசியல் சார்ந்த வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான சர்க்கார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிடும்படி வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிக்கலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் சிறையை விட்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்த சிசிடிவி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில் இன்று சிறப்புக் காட்சியுடன் வெளியான ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இடம் பெற்றுள்ளது. தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.

படத்தில் காசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம் என்ற விமர்சனம் இடம் பெற்றுள்ளது. சவுத் இந்தியால கூட ஒரு கைதி அடிக்கடி ஜெயில்ல இருந்த வெளியே ஷாப்பிங் போனதா செய்தியில் பார்த்தேன் என்ற டயலாக் சசிகலாவை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுதுள்ளது. இந்த வசனத்தை ஜெயில் அதிகாரி ஒருவர் பேச, நடிகர் ரஜினிகாந்த் ஓ.. என கேட்பதாக உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் இரண்டில் நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், சசிகலா ஷாப்பிங் சென்றதை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

லிட்டில் லேடி சூப்பர் ஸ்டார்...ஹாஸ்டேக்கில் ட்ரெண்டாகும் அதுல்யா ரவி.....

Fri Jan 10 , 2020
லிட்டில் லேடி சூப்பர் ஸ்டார் அதுல்யா என்ற ஹாஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. கோலி குண்டு கண்ணழகி அதுல்யாவுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஓர் ஈர்ப்பு உண்டு. தன் அழகான சிரிப்பாலும், கொஞ்சி பேசும் பேச்சாலும் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். அதுவும் சமூக வலைத்தளங்களில் இவரின் புகைப்படத்திற்கு லைக், கமாண்ட் போடுவதற்கு என்றே ஒரு கூட்டம் இவர் பின்னால் இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற ஜீ சினி விருது வழங்கும் நிகழ்ச்சியில் […]
%d bloggers like this: