தமிழ் நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா?நெகட்டிவ் விமர்சனங்களை வீழ்த்தி வசூல் சாதனை செய்த தர்பார்…!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் இந்த படம் சென்னை உள்பட பல நகரங்களில் வசூலில் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ குடும்பத்துடன் அனைவரும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்ப்பது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய முதல் நாளில் சென்னையில் மட்டும் இந்த படம் ரூபாய் 2.27 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படம் 2.0 படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இந்த படம் ரூபாய் 34.5 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி கோவை மதுரை உள்பட முக்கிய நகரங்கள் தற்போது தர்பார் படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்ததாகவும் அடுத்தடுத்து பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறை இருப்பதால் இந்த படத்தின் வசூலில் அடுத்தடுத்த நாட்களிலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாக ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளிவந்த போதிலும் அந்த விமர்சனத்தை கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வத்துடன் திரையரங்குகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் காட்சி முடிவடைந்த உடனேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இந்த படம் வெளிவந்து விட்ட போதிலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

அடவி படத்தில் காட்டுவாசி பெண்ணாக ... ராட்சசன்,அசுரன் படங்களில் நடித்த அம்மு அபிராமி..!!!

Sat Jan 11 , 2020
ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி, அடுத்ததாக நடிக்கும் படத்தில் காட்டுவாசி பெண் வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கும் அடவி திரைப்படத்தில் வருண் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் கே.சாம்பசிவம் தயாரிக்கும் இப்படத்திற்கு சரத் ஜடா இசையமைக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இம்மாதம் படம் வெளியாக […]

Actress HD Images

%d bloggers like this: