ரஜினியின் “தர்பார்” முதலில் ரிலீசாவது எந்த நாட்டில் தெரியுமா?

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் இந்தியாவில் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் ரிலீசாகிறது. தர்பார் திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் ஜனவரி 9ம் தேதி தர்பார் ரிலீசாகவுள்ள நிலையில், ஒரு நாள் முன்பே அமெரிக்காவில் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவில் சுமார் 250 க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் தர்பார் படம் திரையிடப்படுகிறது. மேலும், இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தர்பார் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘சும்மா கிழி’ பாடல் மற்றும் தர்பார் டிரைலருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பு அமெரிக்க ரசிகர்களிடமும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வட அமெரிக்காவின் முன்னணி ஊடகமான பிரைம் மீடியா, கடந்த 10 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. வரும் பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் இணைந்து வெளியிடுகின்றன. இந்தியாவுக்கு முன்னாடியே அமெரிக்காவில் ரஜினியின் தர்பார் படம் வெளியாகவுள்ளதால், அமெரிக்காவில் வாழும் ரஜினி ரசிகர்கள் பயங்கர குஷி ஆகியுள்ளனர். ரஜினியின் தர்பார் தரிசனத்தை தாங்கள் தான் முதலில் காணப்போகிறோம் என சமூக வலைதளத்தில் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Advertisements

Next Post

'வெப் சீரிஸ்' ஆகும் "குற்றப்பரம்பரை" படம் இயக்குனர் யார் தெரியுமா?

Sat Dec 28 , 2019
இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தனது கனவு திரைப்படம் என்று ’குற்றப்பரம்பரை’ திரைப்படத்தை கடந்த பல ஆண்டுகளாக தெரிவித்து வந்தார். இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக அவர் திரைக்கதையை தயார் நிலையில் வைத்திருந்தாலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. வேலராமமூர்த்தி எழுதிய இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க போவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரதிராஜா பூஜையும் போட்டார். ஆனாலும் பூஜையோடு அந்த படத்தின் படப்பிடிப்பில் நின்றது. இதே நேரத்தில் இயக்குனர் பாலாவும் […]
%d bloggers like this: