யோகி பாபு-வுக்காகக் காத்திருந்த சூப்பர் ஸ்டார். “தர்பார்” ஷூட்டிங் இன்றே கடைசி..!

ரஜினிகாந்தின் தர்பார் பட கடைசி நாள் ஷூட்டிங் சென்னையில் இன்று நடக்கிறது. இதோடு இதன் படப்பிடிப்பு முடிகிறது.பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. இதன் பாடல்கள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.இந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் ஷூட்டிங், சென்னையில் இன்று நடக்கிறது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெறுகின்றனர்.

யோகிபாபு பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. அவருக்காகக் காத்திருந்து இன்று ஷூட்டிங் நடப்பதாகக் கூறப்படுகிறது.யோகிபாபு வரும்போது ஷூட்டிங் வச்சுக்கலாம்’ என்று ரஜினி சொன்னாராம். அதுதான் ரஜினியின் பெருந்தன்மை என்கிறது படக்குழு.தர்பார் படம் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisements

fogpriya

Next Post

7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

Sat Dec 14 , 2019
வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் பள்ளியில், 7-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களின் உறவினரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடப்பகுண்டாவைச் சேர்ந்த கோபிநாத் என்ற பணம் படைத்த 30 வயது இளைஞர் தனக்கு உங்கள் மகளை கட்டிக்கொடுங்கள் என்று கேட்க, பெரிய சம்பந்தம் வருதே என்ற ஆசையில் சிறுமிகளின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். […]
%d bloggers like this: