நவம்பர் 27ல் கிழிகிழின்னு கிழிக்க போகும் தர்பார்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் ’தர்பார்’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே கசிந்த செய்தியை நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை தற்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.தர்பார் படத்தின் சிங்கிள் பாடலான சும்மா கிழிகிழி’என்ற பாடல் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என்று அனிருத் கூறும் வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


இந்த பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியன் பாடியுள்ளதாகவும், விவேக் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் அனிருத் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். எனவே மீண்டும் ரஜினிக்கு எஸ்பிபி ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Advertisements

fogpriya

Next Post

ரஜினியை முந்தினார் அஜித், பின்னடைவில் விஜய்: சர்வேயின் புள்ளிவிபரம்..!

Mon Nov 25 , 2019
எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் ஆகியோர்களை அடுத்து தற்போது அஜித்-விஜய் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒன்று தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்கள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை அறிவித்துள்ளது.இதில் அஜித் முதலிடம் பெற்றுள்ளார். அஜித்துக்கு அடுத்து நூலிழையில் குறைவான வாக்குகள் பெற்று ரஜினி இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் விஜய், நான்காம் இடத்தில் கமல் […]
%d bloggers like this: