அந்தப் பிரச்சினையால் நானும் பாதிக்கப்பட்டேன் பிரபல நடிகை..!

மன அழுத்தம் காரணமாக தான் பலமுறை கதறி கதறி அழுததாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். இன்றைய ஸ்மார்ட் ஃபோன் உலகில் சிறுவர்கள் மூலம் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படும் பிரச்சினை மன அழுத்தம். இந்த துறை தான் என்றில்லாமல், எல்லாத்துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. குறிப்பாக சினிமாவில் மன அழுத்தப் பிரச்சினை அதிகம் உள்ளது. பல நடிகர், நடிகையர் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்வது பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. இதில் லேட்டஸ்ட் வரவு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.

இந்தி முன்னணி நடிகையாக, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் தீபிகா. நடிகர் ரன்வீர் சிங்கை தீபிகா காதலித்து கரம் பிடித்து, ஓராண்டு ஆகிறது. இப்போதும் பிஸியான நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தீபிகா தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் நோய் குறித்து பிளாக் ஒன்றில் எழுதியுள்ளார். அதில், ” எனக்கு மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள் 2014ம் ஆண்டு தான் தெரிய தொடங்கின. பிப்ரவரி மாதத்தின் நடுவில் ஒருநாள் நான் காலையில் இருந்து கடுமையாக வேலை செய்து வந்தேன்.

அப்போது திடீரென மயங்கி விழுந்துவிட்டேன். மறுநாள் காலை நான் கண்விழித்து பார்த்த போது, எனது வயிறு காலியாக இருப்பதை உணர்ந்தேன். திடீரென அழுகை வந்தது. கதறி கதறி அழுதேன். ஆனால் அப்போது எனது வாழ்வில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் நடிப்பதற்கு எனது குடும்பத்தினர் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். என் வாழ்வில் மறக்க முடியாத நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். காதல் வாழ்க்கையிலும் எந்த பிரச்சினையும் இல்லை.

அப்படி இருந்தும் எனக்கு ஏதோ ஒருவிதமான பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை. என்னை மகிழ்விப்பதற்காக யாராவது பாடினால் கூட எனக்கு ஆத்திரமாக தான் வரும். ஒவ்வொரு நாளும் விடியும் போது மிகவும் மலைப்பாக இருக்கும்.

சில சமயம் எனது குடும்பத்தினர் என்னுடனே வந்து தங்கியிருந்தனர். அவர்கள் என்னைவிட்டு கிளம்பும் போது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது. ஒருநாள் அம்மாவை விமான நிலையத்தில் விடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தேன். திடீரென அவரது மடியில் சாய்ந்து அழத்தொடங்கிவிட்டேன். ஏன் அழுகிறேன் என அம்மா என்னிடம் கேட்டார். ஆனால் என்னிடம் எந்த காரணமும் இல்லை. எனவே எனது அம்மாவின் ஆலோசனைப்படி நான் மருத்துவரிடம் சென்று, மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்தேன்”, என தீபிகா பதிவிட்டுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

"ஜடா" படம் பற்றி டிவிட்டர் விமர்சனம்..!

Fri Dec 6 , 2019
கதிர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜடா திரைப்படம் குறித்த விமர்சனங்கள் டிவிட்டரில் வெளியாகி வருகின்றன. நடிகர் கதிர், பரியேறும் பெருமாள், பிகில் படங்களை தொடர்ந்து நடித்திருக்கும் படம் ஜடா. இந்தப்படமும் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்நிலையில் இப்படம் ரிலீஸான அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் ஆன்லைனில் ரிலீஸ் செய்துவிட்டது. இந்நிலையில் இப்படம் குறித்த கருத்துக்களை ரசிகர்கள் டிவிட்டர் தளத்தில் […]
%d bloggers like this: