சீரியல் நடிகை மகாலட்சுமி ஈஸ்வர் கள்ளக்காதல் விவகாரம்.. தேவதையைக் கண்டேன் சீரியலை முடிக்க முடிவு? தீயாய் பரவும் தகவல்..!

 சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் சீரியல் நடிகர் தொடர்பான விவகாரத்தில் சீரியலையே முடித்து விட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வம்சம் சீரியலில் வில்லியாக நடித்த ஜெயஸ்ரீ, தனது கணவரும் சீரியல் நடிகருமான ஈஸ்வருக்கும், சீரியல் நடிகையான மகாலட்சுமிக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதற்காக ஈஸ்வர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ஜெயஸ்ரீ போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூன்று பேருமே சின்னத்திரையை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த விஷயம் உற்றுநோக்கப்பட்டது. ஜெயஸ்ரீயின் கணவர் ஈஸ்வர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவதையை கண்டேன் என்ற சீரியலில் நடித்து வந்தார்.

அந்த சீரியலில் வில்லியாக நடித்தவர்தான் மகாலட்சுமி. ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தாயான மகாலட்சுமி தனது கணவர் அனிலுடன் ஏற்பட்ட தகராறால் விவாகரத்திற்கு காத்திருக்கிறார். இந்நிலையில்தான் மகாலட்சுமிக்கும் ஈஸ்வருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜெயஸ்ரீ இருவரும் சாட் செய்த ரெக்கார்டுகள், இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.

ஆனால் இருவரும் நண்பர்கள்தான் என்று கூறிய ஈஸ்வர், தனது மனைவி ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும்தான் தொடர்பு உள்ளது என குண்டை தூக்கிப் போட்டார். கணவனும் மனைவியும் மாறி மாறி கூறிய குற்றச்சாட்டால் சிரிப்பாய் சிரித்தது அவர்களின் குடும்ப விவகாரம். இந்த விவகாரத்தால் தேவதையை கண்டேன் சீரியல் குழுவுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மகாலட்சுமி மற்றும் ஈஸ்வர் இருவரும் தேவதையைக் கண்டேன் சீரியலின் படப்பிடிப்புக்கு சென்று வருகின்றனர்.

ஆனாலும் படப்பிடிப்பின் போது பழைய நிலைமை இல்லாமல் ஒரு இறுக்கமான சூழல் நிலவுவதாக தெரிகிறது. மேலும் ஈஸ்வர்- மகாலட்சுமி பிரச்னை ரசிகர்களிடம் சீரியல் மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியிருப்பதகவும் கூறப்படுகிறது. இதனால் சீரியல் தயாரிப்பு நிறுவனம் விரைவில் தேவதையைக் கண்டேன் சீரியலை முடிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்குப் பதிலாக புதிய தொடரை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

Next Post

அடர்ந்த காட்டில் தனிமையில், சிக்கிக்கொண்ட அமலா பால்... ரகசியம் உடைக்கிறார் 'அதோ அந்த பறவை போல'பட இயக்குனர்..!

Sun Dec 29 , 2019
அடர்ந்த காடு. அதுக்குள்ள மாட்டிக்கிற அமலா பால், எப்படி அதுல இருந்து வெளிய வர்றாங்க அப்படிங்கறது படம். ஓர் ஆண் காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டா வந்திரலாம்னு சொல்வாங்க. ஆனா ஒரு பெண் மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாங்கறதை விறுவிறுப்பா சொல்றோம். இது ரெண்டே நாள்ல நடக்கிற கதை’ என்கிறார், ‘அதோ அந்த பறவைப் போல’ படத்தின் இயக்குனர் கே. ஆர். வினோத். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவிடமும் […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: