‘தனுஷ்’ நடிக்கும் D41 படத்தின் டைட்டில் அறிவிப்பு..!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய ‘பட்டாஸ்’ திரைப்படம் வரும் 16ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய சுருளி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. நெல்லையை பின்னணியாகக் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை உள்பட தென் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. அசுரன் படத்தை தயாரித்த கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு கர்ணன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த டைட்டில் தயாரிப்பாளரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாணு தனது டுவிட்டரில், ‘#கர்ணன்’அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Next Post

கெட்டப் மாற்றி... ஆளே மாறிப்போன சமுத்திரக்கனி... 7மொழிகளில் உருவாகும் படத்தில் மதுரை தாதா ஆகிறார்...

Mon Jan 6 , 2020
மெகா பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி மதுரை தாதாவாக நடிக்க இருக்கிறார். கே.ஜி.எஃப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் படம், கப்ஸா. இதில் உபேந்திரா ஹீரோவாக நடிக்கிறார். சந்துரு இயக்குகிறார். தாதா கதையான இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் தயாராகிறது. சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில் பிரபல தாதாவாக நடிக்கிறார் உபேந்திரா. […]
%d bloggers like this: