தனுஷின் D40 அப்டேட் வந்துடுச்சு.. அந்த டைட்டிலா இருக்குமா?

தனுஷின் டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள டி40 படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. காலை முதலே தனுஷ் ரசிகர்கள், #D40FirstLookUpdate ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்த அப்டேட்டுக்காகத் தான் காத்திருந்தனர்.

தற்போது, அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் பிப்ரவரி 19ம் தேதி டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலையும் படக்குழு அதே நாளில் தான் ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிக்கப் போகிறது. அப்டேட் கிடைத்த சந்தோஷத்தில் ஹாஷ்டேக்கை மேலும், டிரெண்ட் செய்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள். பேட்ட படத்திற்கு பிறகு தனுஷின் 40வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சுருளி எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்திற்கும் அதே டைட்டில் தான் இருக்கும் என செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழு அதனை மறுத்துள்ளது.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் முன்னதாக யோசித்து வைத்திருந்த மாஸ் டைட்டில் தான் வைக்கப் பட போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனுஷின் 40வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டருக்காக தனுஷ் ரசிகர்கள் இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக அந்த வெயிட்டிங் செம்ம வொர்த்தாக இருக்கும் என ரசிகர்கள், தங்களுக்குள்ளே ஆறுதல்களை ட்வீட் போட்டு பரிமாறிக் கொள்கின்றனர்.

தனுஷ் ரசிகர்களுக்கு எப்போதும் விஜய் ரசிகர்கள் ஆதரவாக இருந்து வருகின்றனர். அதே போல விஜய் ரசிகர்களுக்கு தனுஷ் ரசிகர்கள் அன்பு கரம் நீட்டுகின்றனர். இந்நிலையில், காலையில் இருந்து ஹாஷ்டேக் டிரெண்டாக தனுஷ் ரசிகர்களுக்கு உதவியாக இருந்து வந்த விஜய் ரசிகர்கள், அப்டேட்டுக்கு தாங்களும் வெயிட்டிங் என வாழ்த்தி வருகின்றனர்.பொல்லாதவன், ஆடுகளம், மாரி, வடசென்னை, அசுரன் என பல கேங்ஸ்டர் படங்களில் நடித்துள்ள நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெறித்தனமான கேங்ஸ்டர் படமாக டி40 படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், இந்த படத்திற்கு சுருளி அல்ல சம்பவம் தான் டைட்டில் என்றும் ரசிகர்கள் தங்களது கணிப்புகளை பரிமாறி வருகின்றனர்.

Advertisements

Next Post

தல "அஜித்" நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் "கே.எஸ்.ரவிகுமார்" இயக்குகிறாரா? பரபரப்பு தகவல்..!!

Mon Feb 10 , 2020
அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்குவதாக வந்த தகவல் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் […]

You May Like

%d bloggers like this: