தனுஷ்-சன்பிக்சர்ஸ் இணையும் படத்தின் இயக்குனர் இவர்தான்..!

தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக நேற்று ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பு வெளிவந்தது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது. முதல் முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் சன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷ் இணையும் படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது. ஒரு சிலர் சமூக வலைதளங்களில் சில இயக்குனர்களின் பெயர்களை கூறி அவர்கள் தான் இந்த படத்தின் இயக்குனர்கள் என்றும் கூறியிருந்தனர்
ஆனால் இந்த படத்தை இயக்குவது தனுஷ் தான் என்பது சற்று முன் தெரியவந்துள்ளது. தனுஷ் நடித்து இயக்கும் ஒரு படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் ஏற்கனவே தயாரித்து வந்தது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த படம் பொருளாதார பிரச்சினையால் திடீரென்று நின்று போனது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தற்போது விலைக்கு வாங்கி உள்ளதாகவும், தற்போது இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் தொடர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே தனுஷ் 44 படத்தின் இயக்குனர் தனுஷ் தான் என்பது தற்போதைய செய்தி என்பதும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisements

fogpriya

Next Post

நடிகை "நயன்தாரா" தனது காதலருடன் கோயில் கோயிலாக சுற்றி வருகின்றனர்.. கல்யாண பிரார்த்தனையா?

Tue Dec 17 , 2019
பாலாஜி இயக்கி, நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஐசரி கணேஷ் இதனை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியின் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நயன்தாரா தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் நாகர்கோவில் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக நயன்தாரா, தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று பரிகார பூஜைகளைச் செய்தார். அதன் பின்னர், […]

Actress HD Images

%d bloggers like this: