“தனுஷ்” நடிக்கும் கர்ணன்… படப்பிடிப்பு தளத்திலிருந்து கொடுத்த தாறுமாறான அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வெற்றி நாயகனாக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் அசுர வெற்றிகொடுத்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. கடைசியாக வெளிவந்த பட்டாஸ் திரைப்படமும் டீசண்டாக கலெக்ஷனை பெற்று கல்லா கட்டியது. அதையடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி
வந்த நிலையில் சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “இது கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மேலும் இதுவரை 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

யூடியூபில் பிரபலமான "எருமைச்சாணி விஜய்" இயக்குனர் ஆகிறார்... யார் ஹீரோவா நடிக்கிறாங்க தெரியுமா?

Tue Feb 25 , 2020
எருமைச்சாணி விஜய், ஹரிதா என்றால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு தெரியாமல் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் யூடியூபில் பிரபலம் என்பதும் அவர்களுடைய ஒவ்வொரு மீம்ஸ் வீடியோக்களும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கொண்டது என்பதும் அந்த சேனல் தற்போது முன்னணி சேனல்கள் ஒன்றாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எருமசாணி விஜய் கடந்த சில மாதங்களாக ஒரு சில திரைப்படங்களில் காமெடி படத்திலும் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். அந்த […]
%d bloggers like this: