‘வி1 மர்டர் கேஸ்’ டிரைலரை வெளியிட்ட தனுஷ்..!

பவேல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள வி1 மர்டர் கேஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.டி40 படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி படமாக உருவாகியுள்ள வி1 படத்தின் டிரைலரில் கொலைகாரன் யாராக இருப்பான் என்ற ரீதியில் புலனாய்வு நடைபெற்று வருகிறது. லோ பட்ஜெட்டில் ஷார்ட் பிலிம் போல படம் எடுக்கப்பட்டிருந்தாலும், டிரைலரில் போர் அடிக்காத விஷயங்கள் இல்லாமல், ஆர்வத்தை தூண்டும் விஷயங்கள் இருப்பதால் ரசிகர்கள் டிரைலரை பாராட்டி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளதால், தனுஷ் ரசிகர்கள் டிரைலரை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் விஷ்ணுப்பிரியா உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளனர். ரோனி ராஃபேல் இசையில் த்ரில்லர் காட்சிகள் ஆர்வமாக நகர்வது டிரைலரிலேயே தெரிகிறது.இந்த படத்திற்கு கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளை புதிய முறையில் கையாண்டுள்ளார். முற்றிலும் புதியவர்களின் முயற்சியாக உருவாகியுள்ள வி1 திரைப்படம் வரும் டிசம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisements

fogpriya

Next Post

வித்தியாசமான உடையில் செம செக்ஸியாக போஸ் கொடுக்கும்.. "சாக்ஷி அகர்வால்"

Wed Dec 18 , 2019
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானார் சாக்ஷி. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனால் செம ஹேப்பியாக உள்ளார் சாக்ஷி. […]
%d bloggers like this: