ஹரீஷ் கல்யாண் நடிக்கும் “தாராள பிரபு” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு. 8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.

இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப்பும் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு அனிருத், விவேக்-மெர்வின், ஷான் ரோல்டன் உள்பட 8 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 13-ந் தேதி ரிலீசாக உள்ளது.  

Advertisements

Next Post

தற்கொலைக்கு முன் சகோதரியிடம் வீடியோ காலில் கதறிய நடிகை..!!

Tue Mar 3 , 2020
Advertisements
%d bloggers like this: