இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘சல்பேட்டை பரம்பரை’ படப்பிடிப்பு ஆரம்பம்… ஆர்யா, கலையரசனுக்கு கடும் பாக்சிங் பயிற்சி…

பா.ரஞ்சித்தின் ‘சல்பேட்டா பரம்பரை’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்றுத் தொடங்கியது. தினேஷ் நடித்த அட்டகத்தி படம் மூலம் இயக்குனரானவர் பா.இரஞ்சித். அடுத்து கார்த்தியின் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கினார்.

காலாவைத் தொடர்ந்து பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை அவர் படமாக்க இருப்பதாகக் கூறப்பட்டது. நமா பிக்சர்ஸ் இதைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர், சல்பேட்டா பரம்பரை என்ற படத்தை அவர் இயக்குகிறார். குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இதன் கதை, வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவம் என்று கூறப்படுகிறது. இதில், ஹீரோவாக ஆர்யாவும் கலையரசனும் நடிக்கின்றனர்.

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக, ஆர்யாவும் கலையரசனும் குத்துச் சண்டைப் பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த சில மாதங்களாகக் குத்துச்சண்டைப் பயிற்சிப் பெற்ற இவர்கள், இப்போது ரெடியானதை அடுத்து இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுத் தொடங்கியுள்ளது.

Advertisements

Next Post

நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை.... குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ல் தூக்கு தண்டனை...

Wed Jan 8 , 2020
டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தேதிக்கு முன்னதாக […]

Actress HD Images

%d bloggers like this: