“இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2” நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர்..!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 படத்தில் மூலம் நடிகராக அவதாரம் எடுக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார். பாகம் 1 வெற்றி பெற்றதை அடுத்து பாகம் 2ல் தானே இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர ஹர மகாதேவி என்ற காமெடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியாகி வெற்றி பெற்றது.

தற்போது அரவிந்த் சாமியை வைத்து புலனாய்வு என்ற படத்தை இயக்கி வருகிறார் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படம் ஒரு துப்பறியும் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் இதில் நடிக்கமாட்டார்கள். புதிதாக நடிகர், நடிகைகளை தேர்வு செய்த வருவதாக கூறி இருந்தார். இந்நிலையில், இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் சந்தோஷ் பி ஜெயகுமாரே நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இளைஞர்களை கவரவேண்டும் என்பதற்காக இவரின் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. இந்த தவறுகளை சரி செய்து இந்த இரண்டு படங்களையும் இயக்கம் வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

Advertisements

fogpriya

Next Post

திருமணம் ஆன கையோடு புது மாப்பிள்ளைக்கு அடித்த அதிர்ஷ்டம்..

Thu Dec 12 , 2019
நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இன்று திருமணம் நடந்த நிலையில் அவருக்கு ஒரு பெரும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். ஜெர்ரி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான சதீஷ், முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கிறார். தனது டைமிங் சென்ஸ் மற்றும் ஹியூமர் சென்ஸால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் சதீஷ். இந்நிலையில் சதீஷுக்கு இன்றுதான் திருமணம் முடிந்தது. நேற்று மாலை நடைபெற்ற சதீஷின் […]
%d bloggers like this: