நடிகர் “அஜித்”-தின் அடுத்த படம் இயக்குகிறாரா விஷ்ணுவர்தன்..!

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.மேலும், படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை என அஜித்தை மிகவும் ஸ்டைலாக காட்டிய படம் ‘பில்லா’. இப்போதும் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மிகவும் பிரபலம்.

இன்று (டிசம்பர் 14) இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகளாகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக விஷ்ணுவர்தன் தனது ட்விட்டர் பதிவில், “வாவ்! ‘பில்லா’ வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகிறது. என்னவொரு பயணம். நேற்றுதான் ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது,

ஆனால் இன்னமும் என் இதயத்தில் புதிதாக இருக்கிறது. அஜித்துடன் இணைந்த முதல் படம். நன்றி அஜித் சார். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அன்பான ரசிகர்களுக்கு எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவின் நன்றிகள். லவ் யு ஆல், விரைவில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.தற்போது இந்திப் படமொன்றை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். அதனைத் தொடர்ந்து தமிழில் விஷ்ணுவர்தன் படம் இயக்குவார் எனத் தெரிகிறது.

Advertisements

fogpriya

Next Post

"கேப்மாரி" திரைவிமர்சனம்..!

Sun Dec 15 , 2019
 ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யாதயாரிப்பு – கிரின் சிக்னல் இயக்கம் – எஸ்.ஏ.சந்திரசேகர்வெளியான தேதி – 13 டிசம்பர் 2019நேரம் – 2 மணி நேரம் 13 நிமிடம்ரேட்டிங் – அதற்குத் தகுதியில்லாத ஒரு படம்தமிழ் சினிமாவின் சாபக் கேடாக எப்போதாவது ஒரு முறை மிக மோசமான, கீழ்த்தரமான படங்கள் வெளிவரும். இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு நல்ல படத்தைக் கொடுத்து, எப்படியாவது நாமும் பேசப்பட மாட்டோமா என ஏங்கிக் […]
%d bloggers like this: