ரஜினியின் “மேன் வெர்சஸ் வைல்ட்”…ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

உலக புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்ட எபிசோட் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி சேனலின் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். பியர் க்ரில்ஸ் என்பவர் பல நாடுகளிலும் உள்ள காடுகளுக்குள் சென்று தனி ஆளாக அங்கு கிடைப்பவற்றை உண்டு வாழ்ந்து திரும்புவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாரம்சம். உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

படப்பிடிப்பு கடந்த மாதம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. அன்று முதல் ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி ஒளிபரப்பப்படுவதாக டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது.

Advertisements

Next Post

மீண்டும் தள்ளிப் போனதா மாநாடு ஷூட்டிங்..!! இந்த கடைசி நேர மாற்றத்துக்கு என்னதான் காரணம்...

Thu Feb 27 , 2020
மாநாடு படத்தில் இருந்து நடிகர் சிம்புவையே மாற்றலாம் என்ற அளவுக்கு சென்ற பிரச்சனை எல்லாம் தற்போது சுமூகமாக தீர்ந்து, கடந்த வாரம் பூஜையும் போடப்பட்டது. மாநாடு படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், சிம்புவின் மாநாடு ஷூட்டிங் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் அரசியல் படமாக […]
%d bloggers like this: