”டக்கர்” படத்தில் நடிகர் ‘சித்தார்த்’ ஜோடியாகும் ‘திவ்யான்ஷா கவுஷிக்’

மஜிலி தெலுங்கு படத்தில் நடித்தவர் திவ்யான்ஷா கவுஷிக். இவர் தமிழில் டக்கர் படம் மூலம் அறிமுகமாகிறார். சித்தார்த் நடிக்கும் இந்த படத்தை இயக்குநர் கார்த்தி கிரிஷ் இயக்குகிறார். யோகிபாபு, முனிஷ்காந்த், ஆர்ஜே. விக்னேஷ், அபிமன்யு சிங் நடிக்கிறார்கள்.

இதில் சித்தார்த் ஜோடியாக திவ்யான்ஷா அறிமுகமாக உள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள் நிரம்பிய காதல் படமாக ‘டக்கர்’ உருவாகியுள்ளது.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஷால் வெளியிட்டார்.

Advertisements

Next Post

அட்லீ-ஷாருக்கான் படம் டிராப்..! "ஷாருக்கான்" எடுத்த இறுதி முடிவு அதிர்ச்சியில் 'அட்லீ' ரசிகர்கள்..!!

Fri Dec 27 , 2019
விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தையடுத்து அட்லி, ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த படத்திற்கான திரைக்கதையை அட்லி, வெளிநாட்டில் எழுதி முடித்து விட்டதாகவும் அந்த திரைக்கதையை படித்துப் பார்த்த ஷாருக்கான் சில மாற்றங்கள் செய்ததாகவும் கூறப்பட்டது. எனவே அட்லீ-ஷாருக்கான் படம் கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டதுஇந்த நிலையில் தற்போது திடீரென அட்லீ-ஷாருக்கான் படம் டிராப்பாகி விட்டதாக […]

Actress HD Images

Advertisements