“டாக்டர்” படத்திலிருந்து கவின் நீக்கம் ? பரபரப்பு தகவல்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பூஜை நடை பெற்றாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த படத்தை முடித்த பின்னரே அவர் ’டாக்டர்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’டாக்டர்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கவின் நடிக்க இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்த செய்தியை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சில புகைப்படங்களும் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’டாக்டர்’ படத்திலிருந்து கவின் திடீரென விலகி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ’டாக்டர்’ படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது ’டாக்டர்’ படத்தில் கவின் நடிப்பதாக வந்த தகவல் வதந்தி என்றும், அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும், அவ்வாறு இருக்கும் போது அவர் எப்படி படத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்றும் எதிர் கேள்வியை கேட்டனர். இதனை அடுத்து ’டாக்டர்’ படத்தில் கவின் நடிக்கவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

மரண பயத்தை காட்டும் "இருட்டு" பேய் படம்..! டிவிட்டர் விமர்சனம்..!

Sat Dec 7 , 2019
சென்னை: இருட்டு படம் குறித்த விமர்சனங்கள் டிவிட்டரை மிரட்டி வருகின்றன. தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. தனுசு ராசி நேயர்களே, இருட்டு, குண்டு மற்றும் ஜடா. இந்த படங்கள் குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளன. குறிப்பாக படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் எப்படி உள்ளது என்பதை தெரிவித்து வருகின்றனர். அதன்படி வெளியான படங்களில் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ள இருட்டு படம் பாஸிட்டிவான விமர்சனங்களை […]

Actress HD Images

%d bloggers like this: