எனை நோக்கிப் பாயும் தோட்டா குறித்து நள்ளிரவில் ட்வீட் போட்ட நடிகர் தனுஷ்..!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா பல கட்ட போராட்டங்களை தாண்டி ஒரு வழியாக இன்று வெளியாகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்து, கெளதம் மேனனின் கடன் பிரச்சனைகளை தீர்த்துள்ளார். எனை நோக்கிப் பாயும் தோட்டா இன்றைய தினம் ரிலீசாகும் என கெளதம் மேனன் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் முன்னதாகவே அறிவித்து டிக்கெட் புக்கிங் எல்லாம் தொடங்கிய நிலையில், நடிகர் தனுஷ் நேற்று வரை அது குறித்து எந்தவொரு ட்வீட்டும் போடாமல் இருந்த நிலையில், நள்ளிரவில் படம் ரிலீஸ் குறித்த ட்வீட்டை போட்டுள்ளார்.

2016ம் ஆண்டு துவங்கப்பட்ட எனை நோக்கிப் பாயும் தோட்டா 2017ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டு வரை பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில் படம் ரிலீசாகாமல் தள்ளிப் போடப்பட்டது. கெளதம் மேனனின் கடன் பிரச்சனைகளால் எனை நோக்கிப் பாயும் தோட்டா உரிய நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை.

கெளதம் மேனன் நடிகர் சிம்புவை வைத்து விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என இரு படங்களை இயக்கி வெற்றி கொடுத்தார். அடுத்ததாக நடிகர் தனுஷுடன் முதல் முறையாக இணைந்து எனை நோக்கிப் பாயும் தோட்டாவை உருவாக்க முன்வந்த போது, தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். மேலும், மறுவார்த்தை பேசாதே, விசிறி போன்ற பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது உண்டாக்கியது.

அசுரன் படத்திற்கு தொடர்ந்து புரமோஷன் செய்து வந்த நடிகர் தனுஷ், எனை நோக்கிப் பாயும் தோட்டா ரிலீஸ் குறித்து கண்டுக்கொள்ளவில்லை என தொடர்ந்து ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு, தற்போது தான் எனை நோக்கிப் பாயும் தோட்டா நாளை வெளியாகிறது என்ற உறுதியான தகவல் கிடைத்தது என்றும், படம் வெளியாவதில் ரொம்ப மகிழ்ச்சியாகவும், ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன் எனவும் நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

"தலைவி"மாதிரி மாற கங்கனா ரனாவத் எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்காங்க..!

Fri Nov 29 , 2019
சென்னை: தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று நடிப்பதற்காக நிறைய ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. […]
%d bloggers like this: