அசுரனை வீழ்த்திய எனை நோக்கிப் பாயும் தோட்டா.. முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

சென்னை: மூன்று ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளியானாலும், எனை நோக்கிப் பாயும் தோட்டாவிற்கு கொஞ்சம் கூட தியேட்டரில் கூட்டம் குறையவில்லை. தனுஷ் ரசிகர்களின் அதிகப்படியான அன்பினால், சென்னையில் முதல் நாளில் 74 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் முதல் நாளில் 54 லட்சம் மட்டுமே வசூலித்த நிலையில், எனை நோக்கிப் பாயும் தோட்டா அதனை மிஞ்சியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார் நடிப்பில் நேற்று வெளியான எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திற்கு தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அசுரன் வெற்றியைத் தொடர்ந்து எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தையும் மாபெரும் வெற்றி பெற வைக்க தனுஷ் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ரொமான்டிக் மற்றும் ஆக்‌ஷன் த்ரில்லராக வெளியாகியுள்ளது. சென்னையில் முதல் நாள் வசூலாக சுமார் 74 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக, பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சென்னையில் 74 லட்சம் ரூபாய் வசூலை ஈட்டியுள்ள தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் தமிழ்நாட்டில் மொத்த வசூலாக 6 முதல் 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கேரளாவிலும் அசுரன் திரைப்படத்தை விட எனை நோக்கிப் பாயும் தோட்டா முதல் நாளில் நல்ல ஓபனிங் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் தனுஷ் ரசிகர்கள் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அக்டோபரில் வெளியான அசுரன் படம் முதல் நாளில் 54 லட்சம் ரூபாய் வசூலித்திருந்த நிலையில், எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் முதல் நாளில் சென்னையில் 74 லட்சம் ரூபாய் வசூலித்து அசுரன் முதல் நாள் வசூலை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

"எனக்கும் அண்ணிக்கும் சுத்தமா ஆகாது.." - Thambi Audio Launch

Sat Nov 30 , 2019
Advertisements

You May Like

%d bloggers like this: