‘ஹரிஷ் கல்யாணுடன்’ டேட்டிங் செய்ய ஆசை.. பிரபல நடிகை டுவீட்..!

நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் டேட்டிங் செய்ய ஆசை என பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ரைசா வில்சன் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் நடிகை ரைசா மற்றும் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் இணைந்து ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர்.

இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதைடுத்து இந்த ஜோடி ராசியான ஜோடி என்று திரையுலகில் பேசப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க சிறப்பு தோற்றத்தில் ரைசா வில்சன் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ரைசா வில்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் டேட்டிங் செய்ய ஆசை என்றும் அது தமிழகத்தின் நலனுக்காக என்றும் அவர் அறிவித்துள்ளார். ரைசாவின் இந்த டுவீட் ரசிகர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.
ஆனால் அதன்பின் இதற்கு விளக்கம் அளித்த ரைசா, ‘டேட்டிங் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது. இதற்கு முன்னர் அதனை நான் செய்ததில்லை அவ்வாறு இருக்கும்போது என்னிடம் டேட்டிங் குறித்து அடிக்கடி கேள்வி கேட்பவர்களுக்காகவே இந்த பதிலை நான் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

மொத்த முதுகையும் காட்டிய வேதிகா-வை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..!

Sun Dec 8 , 2019
விருது விழாவுக்கு முழு முதுகையும் காட்டியப்படி வந்த நடிகை வேதிகாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். 6ம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் கிளாமர் மற்றும் ஃபேஷன் விருது விழா கடந்த 3ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். ஆலியா பாட், அனுஷ்கா சர்மா, கீர்த்தி சனோன், கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகள் விருதுகளை பெற்றனர். ஸ்டைல் ஐகான் ஆஃப் தி இயர் விருதை இந்த […]
%d bloggers like this: