பிரபல நடிகை! ஆன்லைனில் பல ஆயிரம் பணத்தை இழந்த சோகம்..!

தமிழில் சித்திரம் பேசுதடி – 2 படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா பானர்ஜி. இவர் தந்து செல்போன் மூலமாக ரூ.32 ஆயிரம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா சமீபத்தில் தனது செல்போன் மூலம் ஆன்லைனில்  குளிர்பானம் ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவரது செல்பேசுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது, அதில் பேசிய நபர், பணம் கட்ட வேண்டும் என கூறி அவரது வங்கிக் கணக்கையும் பெற்றுள்ளார். 


 இதையடுத்து, வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22,000 எடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அதே நபர் அவருக்கு திரும்பவும் போன் செய்து, தவறுதலாக பணம் எடுக்கப்பட்டு விட்டது உங்கள் கூகுள் எண்ணைக் கூறவும் என கேட்டுள்ளார். அதை நடிகை கொடுத்ததும் அவரது வங்கில் மீண்டும் ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டது. அதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட பிரியங்கா இதுகுறித்து, போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisements

fogpriya

Next Post

'சூர்யா'-வின் அடுத்த படத்தை இயக்குனர் "வெற்றிமாறன்" இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sun Dec 22 , 2019
தமிழ் சினிமா கண்டெடுத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பொல்லாதவன் , ஆடுகளம் , விசாரணை , வட சென்னை , அசுரன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி திறமையான இயக்குனராக பார்க்கப்படுகிறார்.  கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்து  அப்படத்தில் நடித்திருந்த கலைஞர்களுக்கும் பெருமையை தேடி தந்தது. இப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கவேண்டும் என மக்களே ஆசைப்படுமளவிற்கு அப்படத்தின் வெற்றி […]
%d bloggers like this: