“ஷ்ரதா கபூர்” டேட்டிங் போக ஆசை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் கவின்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், டேட்டிங் செல்ல ஆசைப்படும் நபர் குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் காதல் கடலை என தொடர்ந்து மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். குறிப்பாக இவரது கன்டென்ட் காதல் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

முதலில் சாக்ஷியை காதலித்த கவின், பின்னர் லாஸ்லியாவிடம் கடலை போட்டு வந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த கடலையும் காதலாக மாறியது. பிக்பாஸ் வீட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாய்திறக்காமல் கப்சிப் என்று இருந்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே கவினுக்கு பல காதல்கள் இருந்ததாக கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனக்கு ஒருவர் மீது காதல் ஏற்பட்டு அது தோல்வியில் முடிந்ததாக கூறினார். அப்போது யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள் என தொகுப்பாளர் கேட்க, கவின் பாலிவுட் நடிகையான ஷ்ரதா கபூரின் பெயரை கூறினார். இன்னொருவர் யார் என கேட்க செல்வராகவனுடன் டேட் செய்ய விரும்புவதாக கூறினார் கவின்.

அவரை பற்றி தெரிந்து கொள்ளவே அவருடன் டேட் செய்ய வேண்டும் என கவின் கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இரவில் இருட்டில் பேட்டரியை கழட்டி வைத்துவிட்டு கவினும் லாஸ்லியாவும் ரகசியமாக பேசினர்.

இந்நிலையில் டேட்டிங் என்றதும் லாஸ்லியா பெயரைதான் சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவின், லாஸ்லியா பெயரை சொல்லாமல் ஷ்ரதா கபூரின் பெயரையும் இயக்குநர் செல்வராகவன் பெயரையும் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisements

fogpriya

Next Post

இசைக்கச்சேரி நிறுவனம் "லஷ்மன் ஸ்ருதி" உரிமையாளர் 'ராமன்' தூக்கிட்டு தற்கொலை..!!

Wed Dec 25 , 2019
இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசைக்கச்சேரி நிறுவனம் லஷ்மன் ஸ்ருதி. இதன் உரிமையாளர் ராமன். ஆயிரக்கணக்கான மேடைகளில் இசைக் கச்சேரி நடத்தி வந்த இவர் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் இசை கச்சேரி நடத்தி கொண்டிருந்தார். அப்போது பாதியிலேயே ராமன் வீட்டிற்கு சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில் ராமன் நேற்றிரவு அசோக் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
%d bloggers like this: