வடிவேலு மீது பைனான்சியர் புகார் – தலைமறைவான வைகைப்புயல் வடிவேலு….

தனக்கு தரவேண்டிய 2 கோடி ரூபாய் பணத்தைத் தராமல் வடிவேலு மிரட்டுவதாக எலி படத்தின் பைனான்சியர் ராம்குமார் புகார் அளித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்த திரைப்படம் எலி. அந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட போது வடிவேலுவின் நண்பரான ராம்குமார், தயாரிப்பாளர் சதிஷ்குமாருக்கு 2015 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

ஆனாலும் படம் ரிலிஸான பின்னரும் அந்த பணத்தை வடிவேலுவும் தயாரிப்பாளரும் தராமல் இழுத்தடித்துள்ளனர். அதை ராம்குமார் கேட்க முயன்ற போது இருவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக 2015 ஆம் ஆண்டு ராம்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்வதாக வடிவேலு தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் இன்றுவரை பணத்தை தராமல் வடிவேலு தனது தம்பி மூலம் மிரட்டல் விடுவதாக ராம்குமார் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வடிவேலு மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. 

Advertisements

Next Post

இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'சல்பேட்டை பரம்பரை' படப்பிடிப்பு ஆரம்பம்... ஆர்யா, கலையரசனுக்கு கடும் பாக்சிங் பயிற்சி...

Wed Jan 8 , 2020
பா.ரஞ்சித்தின் ‘சல்பேட்டா பரம்பரை’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்றுத் தொடங்கியது. தினேஷ் நடித்த அட்டகத்தி படம் மூலம் இயக்குனரானவர் பா.இரஞ்சித். அடுத்து கார்த்தியின் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கினார். காலாவைத் தொடர்ந்து பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை அவர் படமாக்க இருப்பதாகக் கூறப்பட்டது. நமா பிக்சர்ஸ் இதைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர், சல்பேட்டா […]
%d bloggers like this: