“அயலான்” அப்டேட்: முதல் முறையாக மூன்று வேடத்தில் “சிவகார்த்திகேயன்”

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் தயாரிப்பில் சமீபத்தில் கேகேஆர் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை இரண்டு வேடத்தில் கூட எந்த ஒரு படத்திலும் நடித்ததில்லை என்ற நிலையில் முதல் முறையாக மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்திசிங் நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, கருணாகரன், இஷா கோபிக,ர் பால சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Next Post

விஜயின் செல்ஃபிக்கு பிக்பாஸ் "லாஸ்லியா" அடித்த கமெண்ட் ..!! என்ன தெரியுமா?

Thu Feb 13 , 2020
வருமான வரித்துறை விஜய் மீது சந்தேகித்து, நெய்வேலியில் இருந்து அப்படியே விஜயையும் தூக்கி வந்து விசாரித்தனர். பின், அவரிடம் ஒன்றும் சிக்கவில்லை என்று வந்துவிட்டார்கள் என்பது ஊரறிந்த விஷயம். பின் அதை எல்லாம் தூசியாக தட்டிவிட்டு ஈஸியாக நெய்வேலி படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய். சில நாட்களுக்கு முன் அவருக்கு இந்த Raid – இல் கலங்கிய ரசிகர்களை பார்க்க வேண்டும் என்று விஜய் ஆசை பட்டு ஒரு பெரிய Van […]
%d bloggers like this: